தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகளிர் சுயஉதவிக்குழுவின் கல்குவாரிக்கு அனுமதி கோரி தேனி ஆட்சியரகம் முன்பு போராட்டம்

20 Mar 2026, 2:55 pm
மகளிர் சுயஉதவிக்குழுவின் கல்குவாரிக்கு அனுமதி  கோரி தேனி ஆட்சியரகம் முன்பு போராட்டம்
<p><strong>மகளிர் சுயஉதவிக்குழுவின் கல்குவாரிக்கு அனுமதி &nbsp;கோரி தேனி ஆட்சியரகம் முன்பு போராட்டம்</strong></p> <p>தேனி ,மார்ச் 20- அரசுக்கு சொந்தமான மகளிர் சுய உத விக்குழு கல்குவாரி செயல்பட தடையால் - 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் &nbsp;கூறி ஏஐடி யூசி தொழிலாளர்கள் &nbsp;தேனி ஆட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேனி மாவட்டம், கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டியில் அரசுக்கு சொந்தமான சங்கிலிக்கரடு கல்குவாரி செயல்பட்டு வருகிறது .மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கல்குவாரி பணிகளில் ஏராளமான தொழிலா ளர்கள் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கல்குவாரி செயல்படுவதற்கான உரிமத்தை மாவட்ட நிர்வாகம் வழங்காததால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு &nbsp;ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கல்குவாரி தொழிலாளர் கள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.