காபி விவசாயிகளுக்கு சர்வதேச சந்தை விலையை நிர்ணயம் செய்யக் கோரி டிசம்பரில் போராட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>காபி விவசாயிகளுக்கு சர்வதேச சந்தை விலையை நிர்ணயம் செய்யக் கோரி டிசம்பரில் போராட்டம்</strong></p>
<p>சேலம், நவ.12 - காபி விவசாயிகளுக்கு சர்வதேச சந்தை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல் வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் மாதம் போ ராட்டம் நடத்தப்படும் என ஏற்காட்டில் நடைபெற்ற காபி விவ சாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு, சேலம் ஏற்காட்டில் புத னன்று (நவ.12) மாநிலச் செயலா ளர் சி. அண்ணாமலை தலைமை யில் நடைபெற்றது. டி.பழனிசாமி வரவேற்றார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கப் பொதுச் செயலா ளர் சாமி நடராஜன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பொதுச் செயலாளர் எம். செல்லையா வேலை அறிக்கை யைச் சமர்ப்பித்தார். தீர்மானங் களை அகில இந்திய இணைச் செயலாளர் ஏ. யோகனன் முன் மொழிந்தார். இதில், காபியை அரசே கொள்முதல் செய்து, ஏற்றுமதி செய்ய வேண்டும். இதன் மூலம், காபி விவசாயிகளுக்கு சர்வதேச சந்தை விலை நிர்ணயத்தின் அடிப்படையில் நியாயமான விலையை வழங்க வேண்டும். காபி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு, அவர் கள் பயிரிடும் நிலங்களுக்கு உட னடியாகப் பட்டா வழங்க வேண் டும். பட்டா இல்லாத விவசாயி களுக்கும், அரசு வழங்கும் மானி யங்களை காபி வாரியம் பெற்று விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு நில அளவு கூட்டப்பட்டு, முன்பு அரை ஏக்க ருக்கு வழங்கப்பட்ட மானியத்தை தற்போது ஒரு ஏக்கராக மாற்றி உள்ளனர்; இதை மாற்றி கால் ஏக்க ருக்கு மானியம் வழங்க வேண்டும். காபிக்குத் தேவையான உரங்களை ஒன்றிய அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். மேலும், நீர்ப் பாசன வசதிக்கான 100% மானியத்தை பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட கோ ரிக்கையை வலியுறுத்தி டிசம்ப ரில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில், தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கத்தின் தலைவ ராக யோகனன் (உதகை), செயலா ளராக ஏ.செல்லையா (கொடைக் கானல்), பொருளாளராக சி. அண்ணாமலை (ஏற்காடு) உள் ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். இந்திய காபி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர் டி. ரவீந்திரன் மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் பி. தேவராஜ் நன்றி கூறினார்.</p>
