குறவன் இனத்தைப் பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி டிசம்பரில் போராட்டம்
25 Nov 2025, 3:29 pm

குறவன் இனத்தைப் பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி டிசம்பரில் போராட்டம்

குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் அறிவிப்பு

சென்னை, நவ. 25 - குறவன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி டிசம்பரில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் அரக் கோணம் ஜோதி நகரில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.கே. தணிகாசலம் தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில், குறவன் இன மக்க ளின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத பிரச்சனை களில் அரசு தலையிட வேண்டியதன் அவசியம் குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.வி. சண்முகம் பேசினார். குறவன் இனத்தைப் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இரண்டு முறை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், இந்திய பதிவாளர் துறை பல்வேறு விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளது. அந்தக் கோப்புகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு, அதிகாரிகளால் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் வசித்து வரும் லட்சக்கணக்கான குறவன் இன மக்களின் கோரிக் கையை நிறைவேற்றிட, இந்திய பதிவாளர் துறைக்கு கூடுதல் விபரங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டு பெற்று பழங்குடி யின பட்டியலில் சேர்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்கு நர்கள், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் குழுக்கள் அரசுக்கு தனது பரிந்துரைகளை கொடுத்துள்ளன. இருந்த போதிலும், ஒரே பிரிவை சார்ந்த குறவன் மக்கள், பல்வேறு பட்டியல்களில் பிரித்து வைக்கப் பட்டுள்ளனர். அதிலும் ஒரு பிரிவாக ‘கேப்மாரி குற வர்கள்’ என வைத்திருப்பது எந்த விதத்திலும் நியா யம் இல்லை. எனவே தமிழக அரசு டிஎன்சி பட்டிய லில் வைத்திருக்கும் 26 பிரிவினரை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறவன் இன மக்களுக்கு தனியாக நலவாரி யம், தாட்கோ மூலம் வங்கிக் கடன், குடிமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. சங்ககாலப் பெண்பாற் புலவர் குறமகள் இள வெயினி-க்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் குறமகளுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்ட பத்தை, மதுரையில் மக்கள் கூடும் இடம் அல்லது கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டடத்தின் மைய மண்டபத்தில் அமைத்து தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகி கள் மருத்துவர் கருணாகரன், பி. முருகன், பரம சிவம், ரமேஷ்பாபு, பாலசுப்பிரமணியன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.