கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்
24 Jan 2026, 3:38 pm
<p><strong>கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கடலூர், ஜன. 24- கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்தவர்க ளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களைக் கண்டித்து, கடலூரில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை மற்றும் அனைத்துத் திருச்சபை கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பேராயர் தே. பீட்டர் பால் தாமஸ் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் இள. புகழேந்தி, காங்கிரஸ், சிபிஎம், விசிக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் தாக்குதல்களைக் கண்டித்துப் பேசினர்.</p>
