தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி பிப். 24 முதல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம்!

15 Feb 2026, 3:03 pm
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி  பிப். 24 முதல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம்!
<p><strong>ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி &nbsp;பிப். 24 முதல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம்!</strong></p> <p>சென்னை, பிப். 15 ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி யமைக்க வேண்டும், அரசு சார்பில் ஆட்டோ செயலியை (App) உடனடியாக &nbsp;அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி &nbsp;பிப்ரவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் பிப்ரவரி &nbsp;24 அன்று தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் &nbsp;ஒரு பகுதியாக, சென்னையில் போக்கு வரத்து ஆணையர் அலுவலகம் முன்பு &nbsp;மூன்று நாட்களுக்குத் தொடர் காத்திருப்புப் &nbsp;போராட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போராட்டத்திற்கான ஆயத்தக் கூட்டம் ஞாயிறன்று (பிப். 15) கிண்டி அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் ஜே. &nbsp;முகமது அனிபா தலைமையில் நடை பெற்றது. இதில் சம்மேளன பொதுச் செயலாளர் எம். சிவாஜி, சிஐடியு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வா கிகள் பங்கேற்றனர். சென்னையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 &nbsp;ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் &nbsp;என்றும், வாழ்வாதார உரிமைகளுக்காக நடத்தப்படும் இப்போராட்டத்திற்குப் பொதுமக்கள் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் எம். சிவாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.