தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் விநியோகத்தை சீர் செய்யாவிட்டால் போராட்டம்

20 Jan 2026, 2:46 pm
குடிநீர் விநியோகத்தை சீர் செய்யாவிட்டால் போராட்டம்
<p><strong>குடிநீர் விநியோகத்தை சீர் செய்யாவிட்டால் போராட்டம்</strong></p> <p>உதகை, ஜன.20- குழாய்களை மாற்றி, குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய நடவ டிக்கை எடுக்காவிட்டால், போராட் டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து, நீலகிரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகையி லுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், கைம் பெண், கல்வி உதவித்தொகை, வங் கிக்கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இதன்பின் பெறப்பட்ட மனுக்கள் மீது, உடனடியாக நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் சம் பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதன்பின் உதகை நசரத் கான்வென்ட் மதர் சுப்பீரியர், உதகை பர்ன்ஹில் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரின் தீர்வை விதிக்கப்படாத நிலங்களுக்கு தீர்வை விதிக்கப்பட்டு, அதற்குண் டான பட்டாக்களை வழங்கினார். இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவ லர் நாராயணன், தனித்துணை ஆட்சி யர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங் கல் அலுவலர் சரவணன், ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர்கள் பழனி சாமி, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, உதகையை அடுத்த மகாலிங்க நகர் பகுதி மக் கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித் தனர். அதில், பாலகொலா ஊராட்சி, 1 ஆவது வார்டுக்குட்பட்ட மகாலிங்க &nbsp;நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் சரிவர கிடைப்ப தில்லை. கிணற்றிலிருந்து குடிநீர் தேக் கத்தொட்டி வரையுள்ள குழாய் மிக வும் பழுதடைந்துள்ளதாலும், துரு &nbsp;மற்றும் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் வருவ தில்லை. இதனை சரி செய்து தரு மாறு பலமுறை வலியுறுத்தியும், எவ் வித நடவடிக்கையும் இல்லை. இத னால் போதிய தண்ணீர் கிடைக்கா மல் கடும் அவதிக்குள்ளாகி வருகி றோம். எனவே, குடிநீர் குழாயை &nbsp;மாற்ற நடவடிக்கை எடுத்து, குடிநீர் &nbsp;விநியோகத்தை சீர் செய்ய வேண் டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட் டம் நடத்தப்படும் என தெரிவிக்கக் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.