10 பட்டாக்கள் பெற நாள் முழுவதும் காத்திருக்கும் அவலம் முதல்வர் தலையிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
1 hour before

10 பட்டாக்கள் பெற நாள் முழுவதும் காத்திருக்கும் அவலம் முதல்வர் தலையிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், நவ.20-20 லட்சம் குடும்பங்க ளுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்படும் என வரு வாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறி வித்துள்ள நிலையில், கும்மிடிப்பூண்டியில் 10 பட்டாக்கள் பெறுவதற்கே காலை முதல் மாலை வரை காத்திருக்கும் அவல நிலை உள்ளதாகவும், இதில் முதலமைச்சர் தலை

யிட வேண்டும் என்றும்தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு வலியுறுத்தி யுள்ளார்.

கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட செதில் பாக்கம், புதுகும்மிடிப் பூண்டி அருந்ததியர் காலனி, கோங்கல்மேடு, சிறுபுழல்பேட்டை எம்ஜிஆர் நகர், பூவலை, தண்டலம், ஈகுவார்பாளையம், பன்பாக்கம், காயலார் மேடு, அரசூர், கொண்டமாநல்லூர், அரும்பாக்கம், கண்லூர், ஆரம்பாக்கம், சூரப்பூண்டி, கும்மிடிப் பூண்டி மேட்டுத்தெரு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியின மக்களுக்குக் குடிமனைப் பட்டா மற்றும் கணினிப் பட்டா வழங்கக் கோரி, வெள்ளியன்று (நவ.20) கும்மிடிப்பூண்டி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தவிச வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை யில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முதற்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தலைவர்கள் வெளிநடப்பு செய்து அங்கேயே சமையல் செய்து போராட்டத்தைத் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போராட்டக் களத்திற்கு வந்த வட்டாட்சி யர் எஸ்.பாலாஜி 10 குடும்பங்களுக்குப் பட்டாக் களை வழங்கியதோடு, அடுத்த வாரம் நடை பெறும் முகாமில் 56 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்ற பட்டியலை வாசித்தார். மேலும், 861 மனுக்கள் மீது கள ஆய்வு முடிந்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

13 அரசாணைகள் வெளியிடப்பட்டும் அதி காரிகள் அவற்றை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதாகவும், மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பி.டில்லிபாபு செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தமிழ்அரசு, செயலாளர் ஜி.சம்பத், வட்டத் தலை வர் சி.முனிரத்தினம், பொரு ளாளர் வி.ராணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ரவி, ஆண்டவன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.வி.சண்மு கம், விதொச மாவட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், மாவட்டத் துணைச் செய லாளர் ப.லோகநாதன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா, பகுதி நிர்வாகிகள் மாரி, கௌதமி, சிபிஎம் மாவட்டச்செயலாளர் எஸ்.கோபால்,மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.பன்னீர் செல்வம், வட்டச்செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன், சிஐ டியு மாவட்ட நிர்வாகி வி.குப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.