வி.கே.டி சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டக் குழு ஆர்ப்பாட்டம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>வி.கே.டி சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டக் குழு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கடலூர், டிச.10- வி.கே.டி சாலைப் பணியை விரைந்து முடிக்க கோரி போராட்ட குழு சார்பாக இந்திரா நகர் ஆர்ச் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், நெய்வேலி ஆர்ச் கேட் முதல் இந்திரா நகர் ஆர்ச் வரை விபத்து மற்றும் இடையூறு இன்றி பயணித்திட போர்க்கால அடிப்படையில் சாலையை விரிவுபடுத்தவும், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த பணியை விரைந்து முடித்திடவும், நெய்வேலி ஆர்ச் முதல் இந்திரா நகர் ஆர்ச் வரை மேம்பாலம் அமைத்திட கோரியும், காடாம்புலியூரில் கடைவீதி முழுவதும் விபத்துகளை தவிர்த்திட தொடர் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வி.கே.டி சாலை போராட்டக் குழு தலைவர் வி.முத்துவேல் தலைமை தாங்கினார். விசிக மாவட்ட பொருளாளர் மருதமுத்து, தொகுதி துணைச் செயலாளர் பாட்ஷா, பன்னீர், சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு மாவட்டச் பொருளாளர் எம்.சீனிவாசன், மதிமுக நகர செயலாளர் மனோகரன், எம்.எல்.எப் பொதுச் செயலாளர் மத்தியாஸ், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அற்புதராஜ், ஐஎன்டியுசி பணித் தலைவர் குமார், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் குணசேகரன், பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன், டிடியூசி பொதுச் செயலாளர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.</p>
