தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களின் அன்றாட வாழ்க்கை மீது ஒன்றிய அரசு தாக்குதல்!

21 May 2026, 12:25 am
மக்களின் அன்றாட வாழ்க்கை மீது ஒன்றிய அரசு தாக்குதல்!

மக்களின் அன்றாட வாழ்க்கை மீது ஒன்றிய அரசு தாக்குதல்!

தருமபுரி, மே 20- எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் அன்றாட வாழ்க்கை மீது தாக்குதல் தொடுத்த ஒன்றிய பாஜக கூட்டணி அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இடது சாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலைகளை லிட் டருக்கு ரூ.3, சிஎன்ஜி எரிவாயு கிலோ ரூ.2 உயர்த்தியுள்ளது, மக்களின் அன் றாட வாழ்க்கை மீது மோடி அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதலா கும்.

ஏற்கனவே வணிக சிலிண்டர்கள் விலை உயர்வால், ஆயிரக்கணக்கான உணவகங்கள் இழுத்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. பெட் ரோலியப் பொருட்கள் அத்தியாவசிய மானது என்ற முறையில் மானியம் வழங்கி, இத்தகைய விலை உயர்வை திரும்பப்பெற வேண்டுமென வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, தரு மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச் செல்வம் தலைமை வகித்தார்.

இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து, சி.நாகராசன், சோ.அருச்சுனன், வே.விஸ்வநாதன், ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். தேவராஜன், சிபிஐ (எம்எல்) விடு தலை மாவட்டச் செயலாளர் கே. கோவிந்தராஜ், மாநிலக்குழு உறுப்பி னர் சி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு, சூரம்பட்டி பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி. பழனிசாமி தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், மாநிலக்குழு உறுப் பினர் ப.மா.பாலமுருகன், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலா ளர் வேங்கை ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை கோவை டாடாபாத் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அஜய்குமார், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் சி.தங்கவேல், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலா ளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண் டனவுரையாற்றினர்.

இதில், சிபிஎம் மூத்த தோழர் யு.கே.வெள்ளியங்கிரி, மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறு முகம், மாவட்டச் செயலாளர் சி.சிவ சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு, சிபிஎம் தாலுகா செயலா ளர் நவீன் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்டச் செயலாளர் போஜராஜ், சிபிஎம் மூத்த தோழர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆமினா, மூத்த தோழர் ஆல் தொரை, சிபிஐ நிர்வாகிகள் சுப்பிரமணி, மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர். பந்தலூர் பஜார் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் ஏரியா செயலாளர் ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வர்கீஸ், பெரியார் மணி கண்டன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். குன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் தலைமை ஏற் றார்.

இதில், சிபிஐ சார்பில் ரங்கன், சிபிஎம் மூத்த தோழர் ஆல்துரை உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சேலம் சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேருந்து நிலையம் முன்பு, சிபிஐ ஒன்றியச் செயலாளர் பழ.ஜீவானந்தம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.பிரவீன்குமார் ஆகியோர் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, ஜி. கணபதி, இடைக்கமிட்டி செயலாளர் கள் ஆர்.கிருஷ்ணவேணி, எஸ்.வசந்தி, எஸ்.முத்துசாமி, ஏ.ஆறுமுகம், ஜி.மணி முத்து, கே.நடராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் உட்பட திரளா னோர் பங்கேற்றனர்.

திருப்பூர் திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமை ஏற்றார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், சிபிஐ மாநகர மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் முத்துசாமி, ஒன்றியப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் நகரச் செயலாளர் தண்ட பாணி தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், தாலூகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், சிபிஐ மாவட்ட நிர்வாகிகள் சி.சுப்பிரமணியம், என்.கிருஷ்ணசாமி, தாலுகா செயலா ளர் சித்ரா ரணதேவ், ஒன்றியச் செய லாளர் தம்புராஜ், சிபிஐ (எம்எல்) விடு தலை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சாமுண்டி புரம், இடுவாய், கருவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் இடைக்கமிட்டி செயலா ளர்கள் பா.சௌந்தரராசன், த.ஜெய பால், கே.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.கணேசன், எஸ். பானுமதி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி, பிரதேசக்குழு செயலாளர் சிவ ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், சிபிஐ நகரச் செயலாளர் காம ராஜ் ஆகிபோர் பங்கேற்றனர்.

ஆனங் கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஐ நகரச் செயலாளர் கணேஷ் குமார், சிபிஎம் நகரச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, சிபிஐ (எம்எல்) விடு தலை பொறுப்பாளர் முருகன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.

இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சக்திவேல், சிபிஐ நிர் வாகி கார்த்திகேயன், சிபிஐ (எம்எல்) விடுதலை நிர்வாகி புகழேந்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர். எலச்சிபாளை யம் பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. சுரேஷ், ஒன்றியச் செயலாளர் வி.தேவ ராஜன், சிபிஐ செயலாளர் க.அன்பு மணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போன்று திருச்செங்கோடு, ராசிபுரம், பர மத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.