இடதுசாரி கட்சிகளின் போராட்ட அறிவிப்பு
19 May 2026, 12:53 am

இடதுசாரி கட்சிகளின் போராட்ட அறிவிப்பு

சேலம், மே 18- ஒன்றிய மோடி அரசு, எரிபொருட்களின் விலையை உயர்த்தி மக்கள் மீது தொடுத்துள்ள பொருளாதார தாக்குதலை கண்டித்து சேலத்தில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில், இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.

சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார்

. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், என்.பிரவீன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில், பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியும், சிஎன்ஜி எரிவாயு கிலோ ரூ.2 உயர்த்தியிருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது ஒன்றிய அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் ஆகும்.

போர் ஒருபுறம் உலக மக்களின் நிம்மதியை குலைக்கிறது எனில், அரசு தொடுக்கிற பொருளாதார போர் உள் நாட்டிலும் மக்களின் அமைதியை, நிம்மதியை சீரழிக்கின்றன.

இதனை கண்டித்து மே 20 ஆம் தேதியன்று ஆத்தூர் மற்றும் நங்கவள்ளியிலும், மே 21 ஆம் தேதியன்று சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்றும், மூன்று இடங்களிலும் திரளானோர் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.