முந்தய பக்கம்

இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...

22 May 2026, 12:22 am
இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...
<p><strong>இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...</strong></p><p>ஒன்றிய பாஜக மோடி அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் சிபிஎம் செங்கல்பட்டு பகுதிக்குழு உறுப்பினர் பாபு தலைமையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், பகுதி செயலாளர், கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, அன்பு, சதீஷ், மு.முனிச்செல்வம், உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிக்கிருஷ்ணன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.</p><p>பெட்ரோல், டீசல் விலை உயர்வினைக் கண்டித்தும், மக்களின் வாழ்க்கை மீதான மோடி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் இடதுசாரிகள் சார்பில் வண்டலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ(எம்எல்) ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமையில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பிஎஸ்.பாரதி அண்ணா, வண்டலூர் வட்டச்செயலாளர் சேஷாத்திரி, சிபிஐ மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சிபிஐ(எம்எல்) மாநில நிர்வாகி இரணியப்பன், உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர் .</p>
Share
FacebookXWhatsAppTelegram