மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு கோரி மூன்றாம் நாள் மறியல்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு கோரி மூன்றாம் நாள் மறியல்</strong></p>
<p>மதுரை, பிப்.13- மாற்றுத் திறனாளிகளுக் கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு அனை த்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்பு உரி மைகளுக்கான சங்கம் சார் பில் மூன்றாம் நாள் தொடர் மறியல் போராட்டம் வெள் ளிக்கிழமை நடைபெற்றது. செல்லூர் மெயின் ரோட் டில் கபடி சிலை அருகில் நடைபெற்ற இந்த போராட் டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.செல்லம்மாள் தலைமை வகித்தார். மாநில அளவில் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 6,000, கடுமையான மாற் றுத்திறனாளிகளுக்கு ரூ. 10,000 மற்றும் படுக்கையி லுள்ள மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.15,000 உத வித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை விடுக் கப்பட்டது. மாவட்ட துணைத் தலை வர் வி.மாரியப்பன் தலைமை யில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயலாளர் ஆ. பாலமுருகன், டி.குமர வேல், என்.மதிபாரதி, கே. பரமசிவம், பி.மணிகண்டன், ஆர்.ஜெயா, எஸ்.ராமலிங் கம், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து செல்லூர் பகுதியில் உள்ள சோலை மஹால் மண்டபத்தில் தற்காலிக மாக வைத்தனர். போராட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் பால முருகன், மாற்றுத்திறனாளி கள் அன்றாட வாழ்க்கையி லேயே பல்வேறு சவால் களை எதிர்கொண்டு வாழ வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும், அண்டை மாநிலங்களில் வழங்கப் படும் உதவித்தொகையை கருத்தில் கொண்டு தமிழ் நாட்டிலும் உதவித்தொகை யை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசின் மக்கள் நலத் திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் வரவேற்கின்றன என்றாலும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கும் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். கோரிக்கை க்கு தீர்வு அறிவிக்கப்படா விட்டால் மாநிலம் முழுவதும் போராட்டங்களை தீவிரப் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார். பாராலிம்பிக் போட்டி களில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாற்றுத் திறனாளிகள், தங்களது உரிமைகளுக்காகவும் உறு தியுடன் குரல் கொடுத்து வரு கிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.</p>
