பண்டிகைக்கு கூடுதல் அரிசி வழங்க கோரிக்கை
2 Nov 2026, 12:28 am

பண்டிகைக்கு கூடுதல் அரிசி வழங்க கோரிக்கை

திருப்பூர், நவ.1 -ரேஷன் கடையில் தட்டுப்பாடின்றி தரமான உணவு பொருட்களை வழங்க வேண்டும், தீபாவளி

பண்டிகை ஒட்டி அரிசி, பருப்பு, எண்ணெய் கூடுதலாக வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து 3 வது மண்டலம் முதலிபாளையம் சிட்கோ கிளைகள் சார்பாக ஞாயிறன்று மதியம் வெள்ளக்கரடு ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயக மாதர் சங்க கிளை பொருளாளர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க கிளைத் தலைவர் முஹம்மது ஆசிக், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வி.ஜானகி ஒன்றியத் தலைவர் எஸ்.ஜானகி, வாலிபர் சங்க முன்னாள் தலைவர் எம்.மகேஷ், பனியன் தொழிலாளர் சங்க கமிட்டி உறுப்பினர் ஏ. செல்வன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்கள். இந்த ஆர்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.