குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
19 May 2026, 11:58 pm
<p><strong>குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை</strong></p><p>உடுமலை,மே 19- பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்காத கோட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் பொது மக்கள் திங்க ளன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கையில், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் முறையாக குடிநீர் விநியோ கம் செய்வதில்லை. மேலும் கோட்டமங்கலம் ஊராட்சியில் கடந்த இரண்டு வாரமாக குடிநீர் வழங்காத நிலையில் ஊராட்சி நிர்வாகத்தி டம் கேட்டால், முறையான பதில் தருவ தில்லை. பொது மக்களின் நலன் கருதி திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுகுடி நீர் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு தரப்படும் குடிநீர் முறையாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். முன்னதாக கட்சியின் குடிமங்கலம் ஒன் றியக்குழு உறுப்பினர் ரங்கநாதன் தலைமை யில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில், ஒன்றியச் செயலாளர் சசிகலா மற்றும் ஒன் றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
