சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்கக் கோரி 4வது நாளாக போராட்டம்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்கக் கோரி 4வது நாளாக போராட்டம்</strong></p>
<p>இராமநாதபுரம், ஜன.8- இராமநாதபுரம் மாவட் டம் சிக்கலை தலைமையிட மாகக் கொண்டு புதிய ஊரா ட்சி ஒன்றியம் அமைக்க வலி யுறுத்தி, பொதுமக்கள் 4 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். ஏற்கனவே கடந்த 3 நாட்க ளாக இதம்பாடல், சிக்கல், பேய்குளம், சொக்கானை, வல்லக்குளம், பனிவாசல், பண்ணந்தை, கீழச்சிறு போது, மேலச்சிறுபோது, கீர ந்தை, உசிலங்குளம் ஆகிய ஊராட்சிகளில் போராட் டங்கள் நடத்தப்பட்டன. நான்காம் நாளான வியா னழன்று, கீழச்செல்வனூர் ஊராட்சியில் அல்லிராஜ் தலைமையிலும், ஸ்டாலின் முன்னிலையிலும், மேல கிடாரம் ஊராட்சியில் முன் னாள் வட்டார வளர்ச்சி அலு வலர் பழனி தலைமையிலும், கீழக்கிடாரம் ஊராட்சியில் ஜமாத் தலைவர் அக்பர் அலி தலைமையிலும், லாசர் முன் னிலையிலும் போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டக் குழு தலைவர் மிசா சைபுதீன், போராட்டக் குழு செயலா ளர் பச்சம்மாள், போராட்டக் குழு நிர்வாகி மங்களசாமி, போராட்டக் குழு உறுப்பி னர்கள் சுப்பிரமணியன், ஜெயக்குமார், இலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். </p>
