அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும்
13 Jul 2026, 12:18 am
<p>அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி, அண்மையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்டத் தலைவர் டி.சுமதி, பொருளாளர் என்.தெய்வானை, சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன், மாவட்டத் தலைவர் சி.கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
