காளிவேலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
5 Jan 2026, 6:21 pm
<p><strong>காளிவேலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.5 - வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து பல்லடம் ஒன்றி யம் காளிவேலம்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை கள் சார்பாக ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சி கிளை சார்பில் கே.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினர் சி. முருகேஷ் கண்டன உரையாற்றினார். பல்லடம் ஒன்றிய குழு உறுப்பினர் பரிமளா, காந்திநகர் கிளைச் செயலாளர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விமல் உள்பட வாலிபர், மாதர் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.</p>
