பென்சன் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி தர்ணா
9 Jan 2026, 3:41 pm
<p><strong>பென்சன் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி தர்ணா</strong></p>
<p>விருதுநகர், ஜன.9- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது பென்சன் சட்ட திருத்தம்- 2025 ஐ வாபஸ் பெற வேண்டும். 8 வது ஊதியக்குழு பரிந்துரை வரம்பில் ஓய்வூதியர்களுக்கான மாற்றத்தை சேர்த்திட வேண்டும்.புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணை ப்புக்குழு சார்பில் விருதுநகரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஏஐபிடிபிஏ மாவட்டத் தலைவர் ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.புளுகாண்டி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி எல்.ஐ.சி ஓய்வூதியர் சங்கத்தின் பி.கே.பவளவண்ணன், எப்.சி.பி.ஏ மாவட்டத் தலைவர் டி.சந்திரராஜன், வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் எஸ்.சி.மாரிக்கனி, டி.ஜெபகுமார், ஏஐபிடிபிஏ மாவட்ட பொரு ளாளர் எம்.பெருமாள்சாமி ஆகியோர் பேசினர். முடிவில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலெட்சுமி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் எம்.பெருமாள்சாமி, பி. கோவிந்தராஜன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ராமசுப்புராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
