பென்சன் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>பென்சன் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கோவை, டிச.17- ஓய்வூதியர்கள் தினத்தை முன் னிட்டு புதனன்று ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். குடும்ப ஓய்வூதியர்களுக்கு 30 சதவீதம் உயர்வுடன் குடும்ப ஓய்வூ தியத்தை உடனே வழங்கிட வேண் டும். ஒன்றிய அரசு ஓய்வூதியர்க ளுக்கு இணையான பென்சன் முன் னேற்றத்தை இன்சூரன்ஸ் துறையி லும் உடனே வழங்க வேண்டும். பென்சன் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பாகுபாடின்றி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவித்திட வேண்டும். மூத்த குடி மக்கள் அனைவருக்கும் அர்த்த முள்ள சமூக பாதுகாப்பை உடனே உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு எல்ஐசி பென்சனர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் பி.வி.கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் வி. சுரேஷ், எல்ஐசி ஓய்வூதியர் சங்க கோவை பகுதி செயலாளர் பி.வாசு தேவன், மூத்த தலைவர் ஏ.ஆர். கல்யாணசுந்தரம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். எல்ஐசி பென்சனர்கள் சங்க கோவை பகுதி நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட் டச் செயலாளர் துளசிதரன், தலை வர் பி.வி.குமார் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். இணைச்செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். சேலம் சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஓய்வூதியர்கள் அமைப் புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ் என்எல் ஓய்வூதிய நிர்வாகி ஆர். பலராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. ஆர். கணேசன், ரயில்வே ஓய்வூதியர் நிர் வாகி எஸ். திருப்பதி உள்ளிட்டு பலர் பங்கேற்று பேசினர். இதில் ஓய்வூ திய அமைப்புகளின் கூட்டமைப்பி னர் பலர் பங்கேற்றனர். இதேபோன்று, கோட்டை சூசன் மஹாலில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர். அருள் மொழி தலைமையில் நடைபெற்ற இவ்விழவில், மாவட்டச் செயலா ளர் சி. ராஜ்குமார் வரவேற்றார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாநில உதவித்தலைவர் வெ.அர்த்தனாரி விழாவை துவக்கி வைத்தார். இதில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று ‘ஓய்வூதியம் காப் போம்’ என்ற தலைப்பில் ஈரோடு, ஒற்றுமை அரங்கத்தில் கருத்த ரங்கம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்க தலைவர் கே.ஆர்.பரம சிவம் தலைமை வகித்தார். செயலா ளர் எஸ்.ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கச் செயலாளர் என். ராமசாமி கருத்துரையாற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண் டனர். முடிவில், பொருளாளர் கே. ராஜகோபால் நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணியன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பழனிசாமி, செயலாளர் எம்.பெரு மாள், பொருளாளர் கே.கேசவன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சுப்பிர மணியன், அஞ்சலக ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வி.முரு கேசன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.மாதேஸ் வரன், போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணைச் செயலாளர் கே.குப்புசாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
