தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கண்டமனூர் கிழக்கு புதுக்குளம் கண்மாயை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

29 Jan 2026, 3:04 pm
கண்டமனூர் கிழக்கு புதுக்குளம் கண்மாயை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>கண்டமனூர் கிழக்கு புதுக்குளம் கண்மாயை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கடமலைக்குண்டு, ஜன.29- தேனி மாவட்டம் கண்ட மனூர் பேருந்து நிலையம் முன்பாக, நீர்நிலை ஊரா ட்சி நில மீட்புக் குழு சார்பில் &nbsp;கண்டமனூர் கிழக்கு புதுக் குளம் கண்மாயை மீட்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குழுத் தலைவர் வேலுச் சாமி தலைமை தாங்கினார். &nbsp;செயலாளர் சுப்புராஜ், பொரு ளாளர் ராஜேந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சி கடமலை&ndash;மயிலை ஒன் &nbsp;றிய செயலாளர் போஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நாகராஜ், தமிழக நீர் நிலைகள் பாதுகாப்பு தேனி மாவட்டச் செயலாளர் அங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கண்ட மனூர் கிழக்கு புதுக் குளம் கண்மாய் பொதுப் &nbsp;பணித்துறை கட்டுப்பாட் டிலா அல்லது ஊரக வள ர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலா என்பதில் தெளிவில்லை எனக் குற்றம்சாட்டினர். கண்மாயில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வாரி &nbsp;மழைநீரைத் தேக்க வேண் &nbsp;டும், ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும், கண்ட மனூர் கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என்பன உள்ளிட்ட கோரிக் &nbsp;கைகளை முன்வைத்து முழக் கங்கள் எழுப்பப்பட்டன. அங்குசாமி பேசுகை யில், 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்குளம் கண்மாய் தற்போது ஆக்கிர மிப்புகளால் 28 ஏக்கராகச் சுருங்கியுள்ளதாகவும் தெரி வித்தார். கண்மாய் ஆக்கிரமிப்பு களை உடனடியாக அகற்றி தூர்வாரினால் விவசாயம் செழித்து, நிலத்தடி நீர்மட் டம் உயர்ந்து, குடிநீர் தட் டுப்பாடு முழுமையாக நீங் &nbsp;கும் என அவர் வலியுறுத்தி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.