ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்க நடைமுறையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
18 Dec 2025, 4:38 pm
<p><strong>ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்க நடைமுறையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>புதுக்கோட்டை, டிச.18- ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதன்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.ஐயப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்தையா உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.ஜபருல்லா, மாவட்ட தணிக்கையாளர் எஸ். அருணாசலம், இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநில கவுரவத் தலைவர் மு. பரமேஸ்வரன் நிறைவுரையாற்றினார். முன்னதாக பெ.செல்வராஜ் வரவேற்க, எஸ்.உதயகுமார் நன்றி கூறினார். ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். வழக்கு விசாரணைகளை நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருச்சிராப்பள்ளி ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள் / விசாரணை அலுவலர்களின் துறை ரீதியான விசாரணைகளை தாமதமின்றி அரசு நிர்ணயத்துள்ள காலவரையறைக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப, ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், வியாழனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் தெளலத் உசேன் கான்,மாவட்டத் துணைத் தலைவர் கண்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சங்கு ராஜன், மாவட்ட இணைச் செயலாளர் சண்முகவேலு, ரவிச்சந்திரன், கோட்டப் பொறுப்பாளர்கள் மணப்பாறை ஜெயராமன், லால்குடி சபூர் அலி ஆகியோர் பேசினர். போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவர் சிராஜுதீன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, டி.என். ஆர்.டி.ஓ.ஏ மாநிலச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க மாநில துணைத் தலைவர் முருகேசன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏதிரே, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டதலைவர் எஸ். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார், மாநிலச்செயலாளர் எஸ்.புஷ்பநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்,அமைப்பின் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். செங்குட்டுவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கே.எஸ்.செந்தில், மாவட்டத் தலைவர் என்.வசந்தன் ஆகியோர் கோரிக்கைகள நிறைவேற்றிட கோரி உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் அ.ரெ.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் பி.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
