‘உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0’ கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
20 Nov 2025, 3:46 pm

‘உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0’ கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, நவ. 20-

தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UATT 2.0) விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய திட்ட

மாக உள்ளதால் அதை முழுவதுமாகக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக் னலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும்

தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலு

வலர்கள் சங்கம் இணைந்து திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தோட்டக்கலை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் பிற துறை அலுவலர்களை இணைக்கும் ‘களப்பணியாளர்கள் இணைப்பு’ முறையைக் கைவிட வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முதன்மை கோரிக்கையாகும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளரும், தோட்டக்கலை உதவி இயக்குநருமான பா. லோகேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் சிவக்குமார், சுதாகர், தலைவர் எஸ். ஆர். ரமேஷ், பொருளாளர் சுரேஷ்குமார், மாநில நிர்வாகி முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரிதிமால் கலைஞன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். தோட்டக்கலைத் துறையின் தனித்தன்மை மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நிர்வாகிகள், யுஏடிடி 2.0 திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை உரையாற்றினர்.