முந்தய பக்கம்

ரூ. 9 ஆயிரம் இபிஎஸ் ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

19 Nov 2025, 3:33 pm
ரூ. 9 ஆயிரம் இபிஎஸ் ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்
<p><strong>ரூ. 9 ஆயிரம் இபிஎஸ் ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சென்னை, நவ. 19 - இபிஎஸ் ஓய்வூதியர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் &nbsp;குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கக் கோரி, சென் னையில் தமிழ்நாடு இபிஎஸ்-95 ஓய்வூதியர்கள் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இபிஎஸ்-95 ஓய்வூதியர்களுக்கு இஎஸ்ஐ திட்டத் தின் வாயிலாக மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 1.9.2014 &nbsp;முன்பு, பின்பு ஓய்வுபெற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் முழு &nbsp;ஊதியத்திற்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், 2014-இல் ஓய்வூதியத்தை குறைக்கும் &nbsp;வகையில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து &nbsp;செய்ய வேண்டும்; வருங்கால வைப்பு நிதியை &nbsp;பங்குச்சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்யக் கூடாது, மூத்த குடிமக்களிடம் இருந்து பறிக்கப் பட்ட ரயில் கட்டணச் சலுகையை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;4 ஓய்வூதியர் சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழு இந்தப் போராட்டத்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர், பிரத மருக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை மனு அனுப்ப &nbsp;முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கே. கனகராஜ் &nbsp;தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட் டத்தை சென்னை இபிஎஸ் ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். சிஐடியு மாநிலத் தலைவர் ஜி. சுகு மாறன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், இபிஎப் வாரிய முன்னாள் உறுப்பினர் பி.வி. இமயா &nbsp;கக்கன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram