100 நாள் வேலைத்திட்டத்தில் தினசரி கூலியாக ரூ.600 வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
30 Dec 2025, 5:57 pm
<p><strong>100 நாள் வேலைத்திட்டத்தில் தினசரி கூலியாக ரூ.600 வழங்ககோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>புதுச்சேரி, டிச.30- 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை சிதைத்து விபிஜி ராம்ஜி என்று பெயர் மாற்றியதை திரும்ப பெற வேண்டும்.நிதி பகிர்மானத்தில் ஒன்றிய அரசாங்கம் 60 விழுக்காடு, மாநில அரசாங்கம் 40 விழுக்காடு என்பதை கைவிட வலியுறுத்தியும் முழு தொகையும் ஒன்றிய அரசே வழங்க வேண்டும். 125 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் சம்பளம் நாளொன்றுக்கு ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பாகூர் தொகுதி மண்மேடு கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பகுதி தலைவர் மனோரஞ்சிதம் தலைமை தாங்கினார். சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் த.தமிழ்ச்செல்வன் கண்டன உரையாற்றினார். பாகூர் கொம்யூன் கமிட்டி தலைவர் அன்பழகன் கொம்யூமன் கமிட்டி செய லாளர் அரிதாஸ், மாநிலக்குழு உறுப்பினர் செல்வராசு உட்பட திரளான விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.</p>
