தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

26 Nov 2025, 4:29 pm
சென்னை விரைவு செய்திகள்

கரும்பு டன்னுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர், நவ.26- கரும்புக்கு டன்னுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமிநாதன், இரா.முல்லை, தாலுகா தலை வர் சிங்காரம், செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ மாவட்டச் செயலாளர் நந்தி, சிஐடியு கன்வீனர் கேசவன், மத்திய மின் ஊழியர் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜோதி, தொமுச  மாவட்டச் செயலாளர் தேவ ராஜ், ஓய்வூதியர் சங்கத்தின் மண்டலச் செயலாளர் ரங்கன், சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ், ஏஐடியுசி மாவட்ட அமைப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த கூட்டுப் போராட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.

ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை ஏமாற்றி மோசடி!

திருப்பத்தூர், நவ.26- திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.7 கோடி  மதிப்பிலான நிலம் மோசடி மூலம் பறிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி பழனி மற்றும் சரோஜா ஆகியோர் சுந்தரம்பள்ளி பகுதியில் 11.19 ஏக்கர் நிலம் வைத்திருந்தனர். ஆந்திரா பகுதியில் கல்குவாரி வாங்க பணம் தேவைப்பட்டதால் இவர்கள் நண்பர் சிவகுமாரின் மூலம் சென்னை விஆர் எண்டர்பிரைசஸ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டனர். அலுவலக மேனேஜர்கள் மது, ஹரிகிருஷ்ணாரெட்டி, சங்கீதா ஆகியோர் ரூ.3.5 கோடி தருவதாகக் கூறி நிலத்தை தங்கள் பெயரில் பதிவு செய்துவிட்டனர். போலி செக் மட்டுமே கொடுத்துவிட்டு சென்றுவிட்ட இவர்களைத் தேடி சென்னை சென்ற பழனி மற்றும் சரோஜா அலுவலகம் பூட்டிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மோசடிக்கு ஆளாகிய இவர்கள் பல அலுவலகங்களில் 12 முறை புகார் அளித்துவந்தும் நடவடிக்கை பெறாத நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீவிர நடவடிக்கை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் கைது அம்பத்தூர்

, நவ.26- அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது தம்பி வேல்முருகன் ஆகியோர், கோபியின் தந்தை அருணாச்சலம் உட்படப் பலரிடம் கடனாகப்பெற்ற பணத்தைத் திரும்பத் தராமல் மோசடி செய்துள்ளனர். கோபி அளித்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் மற்றும் வேல்முருகன் இருவரும் ஏழு வெவ்வேறு நபர்களி டம் இருந்து மொத்தமாக ரூ.53.43 லட்சம் பண த்தைக் கடனாகப் பெற்றுக்  கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தலை மறைவாக இருந்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (34) மற்றும் வேல்முருகன் (32) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரு வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.