சாலை வசதி கேட்டு மறியல்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>சாலை வசதி கேட்டு மறியல்</strong></p>
<p>சேலம், டிச.6- தலைவாசல் அருகே சாலை வசதி கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கள்ளக் குறிச்சி கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தை இணைக்கும் பாக்கம்பாடி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை யில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைப்ப தற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் தார்ச்சாலை தங்களது நில பகுதியில் அமைக்கக்கூடாது எனக்கூறி நீதிமன்றத்தின் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாலை அமைத்து தரக்கோரி பலமுறை புகாரளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெரிய ஏரி பேருந்து நிறுத்தம் பகுதியில் மக்கள் வெள்ளியன்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தலைவாசல் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்</p>
