முந்தய பக்கம்

புதுச்சேரியில் விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

10 Feb 2026, 4:50 pm
புதுச்சேரியில் விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>புதுச்சேரியில் விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>புதுச்சேரி, பிப். 10- &nbsp;தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;சேலியமேடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்துச் சிஐடியு தனியார் வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிலாளர் சங்கச் செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுங்கச்சாவடியை அகற்றா விட்டால் பிப்ரவரி 27-இல் மொரட்டாண்டி சுங்கச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram