தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

3 Oct 2026, 1:07 am
ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, தாலுகா செயலாளர் காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் சங்கரி, சிபிஐ மாவட்ட செயலாளர் நந்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வேலூர் மண்டி வீதியில் கே.ஜெ.சீனிவாசன் (சிபிஎம்), ஜி.லதா (சிபிஐ) எம்.சரோஜா (சிபிஐ-எம்எல்) ஆகியோர் கூட்டு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எஸ்.டி.சங்கரி(சிபிஎம் மாவட்ட செயலாளர்), எல்.மணி (சிபிஐ மாநிலகுழு) இரணியப்பன் (சிபிஐ- எம்எல் மாநில நிலைக்குழு உறுப்பினர்) ஆகியோர் கோரிக்கைகளை கண்டன உரையாற்றினர்.

திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மூத்த தோழர் கே.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சிபிஐ (எம்.எல்)எல், மாவட்ட செயலாளர் எஸ். ஜானகிராமன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொன்னேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கினார். இதில் சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ். பிராப்சந்திரன், சிபிஐ (எம்.எல்) மாவட்ட குழு உறுப்பினர் எல்.ஜெயராஜ், புதிய ஜனநாயக நிர்வாகி மலையப்பன் ஆகியோர் பேசினர். கும்மிடிப்பூண்டியில் சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.