முந்தய பக்கம்

காலமுறை ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம்

19 Feb 2026, 3:09 pm
காலமுறை ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம்
<p><strong>காலமுறை ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>திருவள்ளூர், பிப்.19- கிராம உதவியாளருக்கு வரை யறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று (பிப்.19), &nbsp;முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வருவாய் துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து கறுப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சங்க செயலாளர் எஸ்.செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் அருள், &nbsp;சுரேஷ்குமார், சுகன், பாரதி உள்ளிட்ட பலர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram