பட்டியலின இளைஞர் படுகொலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கோரி போராட்டம்
11 Nov 2025, 3:41 pm
<p><strong>பட்டியலின இளைஞர் படுகொலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கோரி போராட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, நவ.11- திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் தாமரை செல்வன் திங்களன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை யைக் கண்டித்தும், இதில் சம்பந்தப் பட்டவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும். உயிரி ழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவா ரணத் தொகையும், அரசு வேலை யும் வழங்கிட வேண்டும் என வலி யுறுத்தியும், தாமரைசெல்வன் உடலை வாங்க மறுத்தும், செவ்வாயன்று அவ ரது உறவினர்களுடன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச் செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ராஜா, லெனின், கார்த்திகேயன், சந்தானம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் ரேணுகா, மாவட்டத் தலைவர் கனல் கண்ணன், மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ், புதிய தமிழகம், வீர தேவேந்திரகுல வேளாளர், மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை உள்ளிட்ட இயக்கங்கள் பங்கேற்றன.</p>
