டவுன் ஹால் வாடகையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>டவுன் ஹால் வாடகையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கடலூர், பிப்.9- கடலூர் அனைத்துக் கட்சிகள், குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் டவுன் ஹால் வரலாற்றுச் சிறப்புமிக்கது. தற்போது என்.எல்.சி சி.எஸ்.ஆர் நிதியில் இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை, தற்போது நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உணவு அரங்கம் இல்லாமல் 52,000 ரூபாயும், சுத்தம் செய்ய 10,000 ரூபாயும், மின்சாரக் கட்டணமாக ஒரு யூனிட்டிற்கு 25 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வாடகையைக் குறைக்க வலியுறுத்தி யும், புதுப்பிக்கச் செலவிடப்பட்ட 3.15 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியும், அசைவ உணவிற்கு அனுமதி வழங்கக் கோரியும் சி.பி.எம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமையில் மஞ்சக்குப்பம் டவுன் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் வழக்கறி ஞர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் மார்பன், மண்டல செயலாளர் பரசு. முருகையன், மாவட்ட செயலாளர் கலை.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன், மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர்கள் பக்கிரான், ஆளவந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் நாகராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் அணி மாநில நிர்வாகி அருள் பாபு, திராவிட கழகம் பெருமாள், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் அப்துல் ரசூல், மக்கள் அதிகாரம் பாலு, ரவிச்சந்திரன், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் மருதவாணன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ரமணி பொதுநல அமைப்பு தலைவர் ரவி, குரு ராமலிங்கம், தமிழ்நாடு மீனவர் பேரவை சுப்பராயன், எழுத்தாளர் சங்க மாநில குழு உறுப்பினர் பால்கி, மாற்றத்தினாளி சங்கம் வசந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்கள்.</p>
