அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆர்ப்பாட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>அவிநாசி,நவ.12 அவிநாசி அருகே பொன் ராமபுரம் பகுதியில் சாலையை புதுப்பித்து தர வேண்டும், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து புத னன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பொன்ராமபுரம், கிரேஸ் கார்டன், வேல் கார்டன், சௌடாம் பிகை நகர், சென்னிமலை கவுண்டர் நகர் ஆகிய பகுதி மக்கள் பயன்படுத்தும் குமரன் பேக்கரி முதல் பொன் ராமபுரம் வரை தார் சாலையை புதுப்பித்து தர வேண்டும். கிரேஸ் கார்டன் அன்னை தெரசா ஆசிரமம் அருகில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பொன் ராமபுரத்தில் மழைக்கா லத்தில் மழை நீருடன் கழிவு நீர் வீடுகளுக் குள் போகாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்ராமபுரம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் கிளைச் செயலாளர் கதிர்வேல் தலைமை யேற்று நடத்தினார். இதில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிச் சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரு கன், வஞ்சிபாளையம் கிளைச் செயலாளர் ஹனிபா உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர். முன்னதாக முட்டி போட்டு நடக்கும் போராட்டம் நடத்தப்போ வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர், திருமுருகன் பூண்டி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பிரச் சனைகள் தீர்க்கப்படும் என பேச்சுவார்த்தை யில் தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்ட மாக நடத்தப்பட்டது.</p>
<p> </p>
