பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்
25 Mar 2026, 5:29 pm
<p><strong>பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 25- பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாது காக்க உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஓய் வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருப்பூ ரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் சங்க நிர்வாகி குமரவேல் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் ஒப்பந்த ஊழியர்களை ஆட்கு றைப்பு செய்ய கூடாது. குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக நல பாதுகாப்பு திட்டங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்திய நாட்டின் தொழி லாளர் சட்டங்கள் அனைத்தையும் அமு லாக்க வேண்டும். தொழிலாளர் விரோத புதிய சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவ னத்தை பாதுகாக்க உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில நிர்வாகி அருண்குமார், தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலா ளர் சங்க மாநில துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அகில இந்திய பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி அண் ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் திருப்பூர் கிளைச் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.</p>
