முந்தய பக்கம்

முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மறியல்

10 Mar 2026, 3:51 pm
முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மறியல்
<p><strong>முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மறியல்</strong></p> <p>நாமக்கல், மார்ச் 10- குமாரபாளையம் அருகே கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் தேசிய நெடுஞ்சா லையில் நேரு நகர் மக்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் அருகே உள்ள தட்டான் குட்டை ஊராட்சிக்குட்பட்ட நேரு &nbsp;நகர் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய உள்ள இந்த நேரு நகர் பகுதி யில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. தற்பொழுது மாசி மாதம் திருவிழா இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. நேரு நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய் யக்கூடிய ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால், கடந்த 10 தினங்களாக இப்பகுதி மக் களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யாமல் பாதிக்கப் பட்டுள்ளது. தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் குடிநீர் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளை செய்ய &nbsp;முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத் திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என கூறப்படுகிறது. இத னையடுத்து அப்பகுதி பொதுமக் கள் திங்களன்று சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவலறிந்த குமார பாளையம் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து சாலை மறியலில் ஈடு பட்டவர்களிடம் சமரசம் செய்து சாலை மறியலை கைவிட செய்த னர். போக்குவரத்தை சீர் செய்து &nbsp;சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற அலுவலரை வரவழைத்து உட னடியாக லாரி மூலம் குடிநீர் வழங்கு வது எனவும் மின்மோட்டார் பழுது செய்து உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகும் உறுதி அளித் ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram