முந்தய பக்கம்

சுகாதார இயக்க ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா

13 Feb 2026, 5:58 pm
சுகாதார இயக்க ஊழியர்களைப்  பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா
<p><strong>சுகாதார இயக்க ஊழியர்களைப் &nbsp;பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா</strong></p> <p>புதுச்சேரி, பிப். 13- தேசிய சுகாதார இயக்க ஊழியர்க ளைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத் துறையில் கடந்த 26 ஆண்டு களாகப் பணியாற்றி வரும் தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதுவரை சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரித் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு, ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சாரா தலைமை தாங்கினார். மூத்த தொழிற்சங்கத் தலைவர் முருகன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். சிபிஎம் மாடல் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் ராமசாமி, கொளஞ்சியப்பன், மதிவாணன், விஜயகுமார் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட திரளான தேசிய சுகாதாரத் திட்ட இயக்க ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram