தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு காத்திருப்புப் போராட்டம்

8 Jan 2026, 2:44 pm
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு காத்திருப்புப் போராட்டம்
<p><strong>பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>தருமபுரி, ஜன.8- பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வழ்வாதார இயக்கப் பணி யாளர்கள் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாநில ஊரக மற் றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையினை கைவிட்டு, 10 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாது காப்பு மற்றும் பணி நிரந்தரம் செய்ய &nbsp;வேண்டும். பணித்திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவ டிக்கையை கைவிட்டு, உயர்வு வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத் துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற் றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண் டும். பணியின்போது உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட் சம் நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற் றும் நகர்ப்புற வழ்வாதார இயக்க &nbsp;பணியாளர் சங்கத்தினர் வியாழ னன்று முதல் காலவரையற்ற காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் சி.முத்து சாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பி.சிவலிங்கம், பொரு ளாளர் என்.அருண்குமார், துணைத் தலைவர் பி.திரேசா, துணை அமைப் பாளர் சி.கலைசெல்வி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் மீன் &nbsp;முருகன், அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள், அஞ்சல் துறை ஓய் வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு, சங்கத்தின் மாநில நிர் வாகி சீனிவாசன் தலைமை வகித் தார். இதில், மாவட்ட நிர்வாகி ஜோதி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ், தலைவர் அர்த்த னாரி, வட்டக்கிளைச் செயலாளர் ஸ்ரீபதி, பொது சுகாதாரத்துறை அலு வலர் சங்க மாநில நிர்வாகி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.