குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>அவிநாசி, ஜன.27 - அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயி ரத்து 850 வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தி னர் அவிநாசி சேவூர் செல்லும் சாலை யில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் அவிநாசி வட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், தேர்தல் வாக்குறுதிகளில் அறி வித்தபடி 70 அகவை நிறைவு செய்த வர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதி யம், தொகுப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக் கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயி ரத்து 850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை நீக்கி, உண்மையான காசு இல்லா மருத்து வத்தை உறுதிப்படுத்த வேண்டும். உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. இதில், அவிநாசி வட்டக் கிளை செயலாளர் நடராஜன், ஊத்துக்குளி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு அவிநாசி பொது தொழிலாளர் சங்க தலைவர் ஏ.ஈஸ்வரமூர்த்தி வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் துரை ராஜ், துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார். உடுமலை: மடத்துக்குளம் வட்டாட்சியர் அலு வலகத்தின் முன்பு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மடத்துக்குளம் வட்டக் கிளை சார்பாக கோரிக்கை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் ராமதுரை தலைமை வகித் தார். மாவட்ட இணைச் செயலாளர் ஆறு முகம் துவக்கி வைத்துப்பேசினார். வட்டக்கிளை செயலாளர் கருணாநிதி கோரிக்கை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்கு மார், பரிமளம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் மின்னல் கொடி நிறை உரையாற்றி னார்.</p>
