தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யக்கோரி தவிச போராட்டம்

8 Dec 2025, 4:39 pm
சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யக்கோரி தவிச போராட்டம்
<p><strong>சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யக்கோரி தவிச போராட்டம்</strong></p> <p>நாமக்கல், டிச.8- பொன்னேரி கைகாட்டி பகுதியிலிருந்து, கோம்பை வரை சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த பொன்னேரி கைகாட்டி பகுதியிலிருந்து, கோம்பை வரை சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் துறையினர் போலீசார் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களும் விவசாயிகளும் சாலை வசதி கேட்கும் இடம் ஓடை புறம்போக்கு உள்ளதால், அதில் சாலை அமைக்க முடியாது என தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பெயரில் சேந்தமங்கலம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் விவசாய சங்கத்தினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை மனுவாக கொடுத்தால் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இதனையடுத்து விவசாய சங்கத்தினர் வட்டாட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அண்மையில் வழங்கினர். இந்நிலையில் 90 சதமான நில அளவீடு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 10 சதம் நிலவு நிலம் அளவீடு செய்யும் பணியானது சனியன்று நடைபெற்றது. அப்போது அங்கிருந்த விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அதிகாரிகளுக்கும் நிலத்தின் உரிமையாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் போராட்ட களத்தில் குதித்த விவசாயிகள் சங்கத்தினர் முழுமையான நில அளவீடு செய்யும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடும்பத்திருடன் அங்கே சாலை ஓரத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து எருமப்பட்டி போலீசார், வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எதிர்வரும் 15 நாட்களுக்குள் மீதமுள்ள 10 சதமான நில அளவீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்று, அதன் பின்னர் சாலை அமைப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சிவச்சந்திரன், எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் மு.து.செல்வராஜ், பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சத்யா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.