நில உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
21 Nov 2025, 5:11 pm
<p><strong>நில உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், நவ.21- கரூர் வெண்ணெய் மலையில் நில உரி மைக்காக போராடிய மக்களை காவல் துறையை வைத்து கைது செய்த அராஜ கத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளியன்று ஊத்துக்குளியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் நில உரிமையை பறிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். இனாம் நிலம், குத்தகை விவசாயம், அடிமனை பயனாளிகளுக்கு எதி ராக செயல்படும் அறநிலையத்துறை, வக்ப் போர்டு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமி ழக அரசு உரிய சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி னர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வடுக பாளையம் வீடு, மனை உரிமையாளர் சங்க தேவசேனா பல. சண்முகம், அடிமனை பய னாளிகள் சங்க கை.குழந்தைசாமி, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். முடிவில் சிஐடியு நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார்.</p>
