தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
21 Jan 2026, 3:58 pm
<p><strong>தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.21- தொழிற்பயிற்சி நிலை யங்களில் உள்ள காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி திருப்பூர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பு புதனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்ப யிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.நஞ்சப்பன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிற்ப யிற்சி நிலையங்களில் பணிபுரியும் சான்றிதழ் தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஐடிஐயில் வர்க்சாப் அஸ் ஸிஸ்டெண்ட், உதவி இளநிலை பயிற்சி அலு வலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி, முதல்வர் காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். ஜெ.டி.ஒ பணி நியம னத்தில் 1:1 என்பதை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சிஒஇ மற் றும் பிபிபி பயிற்றுநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பணிமனை பண்டக உதவி யாளர்களின் பணிக்காலத்தை பணிக்கால மாக வரன்முறைப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி கிளைச் செயலா ளர் என்.பசுபதி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன், பொருளாளர் ஜெ.அந்தோனி ஜெயராஜ், தெற்கு வட்டக்கிளை துணைத் தலைவர் சரவ ணன் ஆகியோர் வாழ்த்து பேசினர். முடிவில் கிளை பொருளாளர் எஸ்.சிவகுமார் நன்றி கூறினார்.</p>
