வீட்டுமனைப் பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>வீட்டுமனைப் பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தென்முடியனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கணபதி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.</p>
