சர்கார் காசாவில் அனைவருக்கம் குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
11 Dec 2025, 5:47 pm
<p><strong>சர்கார் காசாவில் அனைவருக்கம் குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, டிச.11 – உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி, சிபிஎம் கட்சியின் 4வது வார்டு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் உளுந்தூர்பேட்டை நகராட்சி 4, 5, 6, 9 ஆகிய வார்டுகளுக்குத் தடை யின்றி குடிநீர் வழங்கப் போதிய அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும். சமுத்திரகுளம் அருகில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். சர்க்கார்சாகாவில் குடியிருக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும். உளுந்தூர்பேட்டையில் கட்டி முடிக்கப்பட்ட மின் மயானத்தை உடனடி யாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்து நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த போராட்டம் கிளைச் செயலாளர் ஏ. பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு ஜி. ஆனந்தன், மாவட்ட குழு எம். ஆறுமுகம், பி. சேகர், நகரச் செயலாளர் பி. ஸ்டாலின் மற்றும் மூத்த தோழர் கே. தங்கராசு ஆகி யோர் கண்டன உரையாற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.</p>
