முந்தய பக்கம்

வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

5 Mar 2026, 3:59 pm
வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம், மார்ச் 5-  நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில், கிராமப் புறங்களில் நத்தம் புறம்போக்கில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு பட்டா மற்றும் வீட்டு மனை கேட்டு, கோட்டாட்சியர் வட்டாட்சியர் பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் பட்டா கேட்டு, வீட்டு மனை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  பெரும்கடம்பனூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ. இளங்கோவன் தலைமையில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி. மாரிமுத்து, துவக்கி வைத்து உரையாற்றினார்.  போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முருகையன் ஒன்றியச் செயலாளர் வி.வி. ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.கே குமார், ஜே. தமிழ்ச்செல்வி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.கே மார்க்ஸ், என். ராஜாராமன், கிளைச் செயலாளர் ஆர். துரை, கட்சிக்கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.  15 நாட்களுக்குள் விசாரணை செய்து பட்டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உறுதியளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram