மாற்றுத்திறனாளிகளை முழுமையாக கணக்கெடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
2 Oct 2026, 2:31 am

மாற்றுத்திறனாளிகளை முழுமையாக கணக்கெடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், அக்.1-2027-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் முழுமையாக பதிவு செய்ய வலியுறுத்தி, கடலூரில் புதன்கிழமை (செப்.30) மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை

களுக்கான சங்கம் சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் இராம.நடேசன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், மாவட்டத் தலை

வர்கள் ஜி.ராமையன், எஸ்.பி.அப்துல்ஹமீது, மாவட்ட இணைச் செயலர் வி.வசந்தி, மாவட்டச் செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, 21 வகையான மாற்றுத் திறனாளிகளையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முழுமையாக பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.