தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குளறுபடிகளைக் களைந்து காசில்லா மருத்துவம் கோரி ஆர்ப்பாட்டம்

11 Nov 2025, 3:41 pm
குளறுபடிகளைக் களைந்து காசில்லா மருத்துவம் கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>குளறுபடிகளைக் களைந்து காசில்லா மருத்துவம் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், நவ.11- மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள &nbsp;குளறுபடிகளைக் களைந்து, காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வட்டத் தலைநக ரங்களில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும், 70 &nbsp;வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுத லாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க &nbsp;வேண்டும், தொகுப்பூதிய ஓய்வூதியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு &nbsp;அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் சார்பில் திருப்பூர், உடுமலை, அவிநாசி ஆகிய பகுதிகளில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூர் ராயபுரம் ஓய்டபிள்யூசிஏ ராயபு ரம் ரவுண்டானா எதிரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட கிளைத் தலைவர் பி. மகுடேஸ்வரன் தலைமை ஏற்றார். இதில் &nbsp;கோரிக்கைகளை விளக்கி பல்லடம் வட்ட கிளைச் செயலாளர்ர டி.ராஜகோபாலன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ராணி, பிஎஸ் என்எல் டிஓடி ஓய்வூதியர்கள் நலச்சங்க &nbsp;மாவட்டத் தலைவர் பா.சௌந்தரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்க மாவட்டத் தலைவர் வி. பி.பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். இதில் திருப்பூர், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட னர். திருப்பூர் வட்ட கிளைச் செயலாளர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார். உடுமலை வட்டாட்சியர் அலுவலகத் திற்கு முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு உடுமலை வட்டத் தலைவர் தாசன் தலைமை ஏற்றார். இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மின்னல்கொடி, &nbsp;அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியம், சிஐடியு மாவட்ட &nbsp;துணைச் செயலாளர் ஜெகதீசன், &nbsp;ஓய்வு பெற்ற பள்ளி கல்வித்துறை சங்க நிர்வாகி செல்லதுரை, கணபதி, பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் சங்கத்தின் சக்திவேல், முன்னாள் வட் டாட்சியர் தயானந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் அனைத்துத்துறை &nbsp;ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். அவிநாசி: அதேபோல் அவிநாசியில் சேவூர் சாலை யில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க &nbsp;வட்ட கிளைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளைச்செயலாளர் நடராஜ், ஊத் துக்குளி வட்ட கிளைச் செயலாளர் பாஸ்கர், &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இனைச் செயலாளர் ராமன், மாவட்ட துணைத் தலைவர்கள் துரைசாமி, சண்முகம், &nbsp;சண்முகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.