தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

27 Nov 2025, 3:11 pm
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
<p>உதகை, நவ.27- நீலகிரி மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத அனைத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக் கோரி பந்தலூரில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில், இந்தியா விடுதலை பெற்றதிலி ருந்து தற்போது வரை மின் இணைப்பு இல்லாத வீடுகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந் துள்ளது. மூன்று தலைமுறைகளாக மின் இணைப்பு இல்லாத வீடுகளி லேயே மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். இருட்டு வீட்டிலேயே கல்வி கற் கக்கூடிய குழந்தைகளின் எண் ணிக்கை அதிகமாகிக்கொண்டே உள்ளது. உடனடியாக மின் &nbsp;இணைப்பு வழங்க வேண்டும் &nbsp;என வலியுறுத்தி பல ஆண்டுகளாக &nbsp;போராட்டங்கள் நடைபெற்று வந்தா லும், இவர்கள் வாழக்கூடிய நிலத் தின் வகைகளை காரணம் காட்டி &nbsp;அரசு மின் இணைப்பு வழங்குவதை &nbsp;தவிர்த்து வந்தது. ஆனால், கடந்த &nbsp;சில மாதங்களாக வீடுகளுக்கு மின் சாரம் வழங்கப்படுகின்றது. இது பல &nbsp;ஆண்டு கோரிக்கைக்கு கிடைத்த &nbsp;வெற்றியாக கருதப்பட்டாலும், மின் &nbsp;இணைப்பு பெறுவதற்கு தடை யில்லா சான்றிதழை தருவதற்கு வருவாய்த்துறை ரூ.70 ஆயிரத்திலி ருந்து ரூ.ஒரு லட்சம் வரை கையூட் டாக பெற்றுக்கொண்டு தடை யில்லா சான்றிதழ் வழங்கி வருகின் றது என்கின்ற புகார் எழுந்துள் ளது. பல ஆண்டுகள் போராட்டங்கள் நடத்தி அரசு மின் இணைப்பு வழங் குவதற்கு அரசு இசைந்தாலும், ஒரு &nbsp;சில அதிகாரிகள் மற்றும் இடைத்தர கர்களால் பணம் படைத்தவர்க ளுக்கு மட்டுமே மின்சாரம் என் கின்ற சூழ்நிலைக்கு கூடலூர், பந் தலூர் பகுதியில் உள்ள மக்கள் &nbsp;தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழ் நாடு அரசு நேரடியாக இப்பிரச் சனையில் தலையிட்டு, அனைவ ருக்கும் மின்சாரம் என்கின்ற வர லாற்று வளர்ச்சியை உறுதி செய்ய &nbsp;வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று பந்தலூரில் பெருந்திரள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி, வட் டாட்சியிடம் மனு அளித்தனர். முன் னதாக, இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் சொலாளர் வி.ஏ. பாஸ்கரன், மூத்த தோழர் அர் ஜுனன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் வர்கீஸ், சி.மணிகண்டன், வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் ராசி ரவிக்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.