தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாத்மா காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டம் தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

23 Dec 2025, 4:05 pm
மகாத்மா காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டம் தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
<p><strong>மகாத்மா காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டம் தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>உடுமலை, டிச.23 - &nbsp;ஒன்றிய மோடி அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை &nbsp;உறுதி அளிப்பு &nbsp;திட்டத்தை, விபி ஜி ராம் ஜி என்று பெயர் &nbsp;மாற்றம் செய்திருப்பதை கண்டித்து அகில இந்திய விவசாய &nbsp;தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று எரிசனம்பட்டி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை ஒன்றியத் தலைவர் &nbsp;ரங்கராஜ் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலப் &nbsp;பொருளாளர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், &nbsp;ஒன்றியச் செயலாளர் கனகராஜ் மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் அருண் பிரகாஷ் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில், ஊராக வேலை திட்டத்தில் செய்துள்ள சட்டத்தி ருத்தத்தை ஒன்றிய மோடி அரசு கைவிட வேண்டும். மகாத்மா &nbsp;காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டம் என்கிற &nbsp;பெயரிலேயே இந்த திட்டத்தை தொடர வேண்டும். மேலும் &nbsp; இந்த திட்டத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு &nbsp;செய்ய வேண்டும். வேலை நாளை 200 ஆகவும், சம்பளம் ரூ. 600 ஆகவும் உயர்த்திக் கொடுக்க வேண்டும். அனைத்து பேரூ ராட்சிகளுக்கும், நகர்புறத்துக்கும் நகர்ப்புற வேலை உறுதி &nbsp;அளிப்பு திட்டம் என்கிற பெயரில் திட்டத்தை தொடங்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.