தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி மறியல்

5 Dec 2025, 4:21 pm
கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி மறியல்
<p><strong>கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி மறியல்</strong></p> <p>தருமபுரி, டிச.5- இந்திரா நகர் பகுதியில் கழிநீர் கால் வாய் அமைக்காமல், தங்களைப் புறக் கனிக்கப்பதாக் குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். தருமபுரியில் இருந்து அரூர், திரு வண்ணாமலைக்கு தினந்தோறும் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் செல்கின் றன. இதனால் போக்குவரத்து நெரிசல் &nbsp;மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவ தால் மக்கள், நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தரும புரி - அரூர் வழியாக திருவண்ணாம லைக்கு 113 கிலோ மீட்டர் தூரம், 4 &nbsp;வழிச்சாலை ரூ.410 கோடியில் அமைக் கும் பணி கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன் நடைபெற்றது. இந்த பணி யானது தருமபுரியில் இருந்து அரூர் வரை முழுமையான பணி நடைபெற்றி ருந்தாலும், தருமபுரி ராயப்பேட்டை யில் இருந்து சாக்கன்கொட்டாய் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சாலை விரி வாக்கம் பணி நடைபெறவில்லை. இந்த பணியை விரைவாக முடிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். &nbsp;அதனடிப்படையில் கடந்த சில தினங்களாக சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. தருமபுரியிலி ருந்து அரூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலை விரிவாக்க பணியின் போது, சாலையின் அருகே உள்ள கிராம மக்க ளின் நலன் கருதி சாலையின் இருபுற மும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப் பட்டது. தற்போது அமைக்கப்படும் சாலை விரிவாக்கம் பணியில், சாலை யோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப் படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால் வாய் அமைத்து வருகின்றனர். ஆனால், செட்டிக்கரை இந்திரா நருக்கு அருகாமையில் விரிவாக்கப்படும் சாலை யில் கால்வாய் அமைக்கப்படவில்லை என தெரிவித்து, அப்பகுதி பொதுமக் கள் வெள்ளியன்று தருமபுரி - அரூர் சாலையோரம் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப் போது, இந்திரா நகர் பகுதி சாலை யிலும் கழிவுநீர் கால்வாய் அமைக் கபடும் என அதிகாரிகள் அளித்த உறுதி யின்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.