ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி போராட்டம்
19 Mar 2026, 3:18 pm
<p><strong>ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி போராட்டம்</strong></p>
<p>சேலம், மார்ச் 19- நெய்க்காரப்பட்டி அருகே உள்ள மலங் காடு மற்றும் அதனை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ரயில்வே மேம் பாலம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி அருகே உள்ள மலங்காடு, எட்டி மரத்து காடு, வெள்ளையன் வட்டம், பைத்தியக்காரன் காடு உட்பட 25 மலைக் கிராம மக்கள் உள் ளது. இந்த கிராம மக்களின் அடிப்படை தேவை களை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் பிற பணி களுக்கும் நெய்க்காரப்பட்டி மற்றும் சேலத்துக்கு வருவதற்கு சேலம் - கோவை மார்க்க ரயில்வே தண்டவாளத்தின் நீர் வழிச் சாலையில் தான் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில், ரயில்வே தண்டவாளத் தில் மேம்பாலம் அமைக்கக் கோரி கடந்த 40 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனையடுத்து ரயில்வே நிர்வா கம் ரயில்வே தண்டவாளத்தின் மீது 16 அடி அகலத்தில் பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக் கீடு திட்ட மதிப்பீடும் தயார் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது. ஆனால் மாநில அர சின் அனுமதி இல்லாததால் இந்த பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், புதனன்று 25 மலை கிராம மக்களும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், முக்கிய வீதிகள் சாலைகளில் பிளக்ஸ் போர்டுகளை வைத்தும் போராட்டத்தை துவக்கினார். மேலும் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபடுவதற்காக 25 மலை கிராம மக்கள் அணி திரண்டு ஊர்வலமாக வந்த னர். பின்னர் ரயில்வே தண்டவாளம் அருகே வந்த அவர்களை வருவாய்த்துறையினர் மற் றும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.</p>
