முந்தய பக்கம்

தூண்டில் வளைவு அமைக்க கோரி மறியல்

4 Dec 2025, 3:52 pm
தூண்டில் வளைவு அமைக்க கோரி  மறியல்

தூண்டில் வளைவு அமைக்க கோரி  மறியல்

புதுச்சேரி, டிச.4- சின்ன காலாப்பட்டு கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு பகுதிகளில் சுமார் 200 படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் சின்ன காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு,மீனவ மக்களின் வீடுகள், இடிந்து வருவதோடு, ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 படகுகள், வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால் மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால்,  நிரந்தர தீர்வாக தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் சின்ன காலாப்பட்டு    கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற, சாலை மறியல் போராட்டத்தில்,மீனவர்கள்  தங்களது படகுகளையும், மீன்வலைகள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்த காலாப்பட்டு காவல் நிலைய போலீசார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram